திருவள்ளூர் நகராட்சி 12 வது வார்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலை ஆக்கிரமிப்புகள் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றம் : நகராட்சி நிர்வாகம் அதிரடி :

பதிவு:2024-11-29 11:32:58

திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் நகராட்சி 12- வது வார்டு பத்தியால் பேட்டை பகுதியில் சிலர் நகராட்சிக்கு சொந்தமான 20 அடி சாலையை ஆக்கிரமிப்பு செய்து படிக்கட்டுகள் திண்ணைகள் கட்டி இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து சாலை ஆக்கிரமிப்பு என்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இரண்டு நாட்களுக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.மேலும் சாலையில் செல்பவருக்கு இடையூறு செய்யும் வகையில் செங்கல்,மணல், ஜல்லி மற்றும் தண்ணீர் ட்ரம்ஸ் ஆகியவற்றை சாலைகளில் வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதையும் இரண்டு நாட்களுக்குள் அப்புற படுத்த வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் அப்பொருள்களை பறிமுதல் செய்யப்படும். மேலும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கடந்த பத்து தினங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் யாரும் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் நகரமைப்பு ஆய்வாளர் விஜயா மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இரண்டு நாட்களில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரித்தனர்.