தமிழின போராளி மருத்துவர் அய்யா அவர்களை அவதூறாக பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்து திருவள்ளூரில் வழக்கறிஞர், சமூக நீதி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-11-29 11:35:30

திருவள்ளூர் நவ 28 : சென்னை கண்ணகி நகரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முதல்வர்.அப்போது, அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்த உள்ளாரே, அதற்கு உங்களின் பதில் என்ன என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்பொழுது தமிழக முதலமைச்சர், "அவருக்கு வேறு வேலை இல்லை; தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார்." என கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரியுள்ளார்.

இந்நிலையில் தமிழின போராளி மருத்துவர் அய்யா அவர்களை அவதூறாக பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்து திருவள்ளூரில் உள்ள நீதிமன்ற அலுவலகம் முன்பு வழக்கறிஞர், சமூக நீதி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர், சமூக நீதி பேரவை மாவட்ட செயலாளர் இரா.கேசவன் தலைமையில் வழக்கறிஞர்கள் சோ.சு.அன்பு,ராஜசேகர் உள்ள திரளானனோர் கலந்து கொண்டு தமிழின போராளி மருத்துவர் அய்யா அவர்களை அவதூறாக பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வழக்கறிஞர் பலர் கலந்து கொண்டனர்.