திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழில் நிதி வல்லுநராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-11-29 11:39:26

திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 198 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்; செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் தனிநபர் மற்றும் குழு தொழில் முனைவுகளை ஏற்படுத்துதல், அந்த நிறுவனங்களுக்கு தேவையான நிதி இணைப்பினை ஏற்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி நீடித்த நிலையான மேம்பாட்டினை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு திட்டம் செயல்படுகிறது.

ஊரக பகுதிகளில் புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் 30% மானியத்துடன் கூடிய இணை மானியத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக பயனாளிகளை கண்டறிதல், வங்கிகளின் மூலம் கடனுதவி பெற்று தருதல், வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் நடத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ள தொழில் நிதி வல்லுநர் என்ற பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

எனவே வங்கி தொடர்பான பணி முன் அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற அல்லது விருப்பு ஓய்வு பெற்ற முதல்நிலை வங்கி அலுவலர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அணுக வேண்டிய முகவரி, மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், எண்.1/ 184,திருவள்ளூர் ஜெயா நகர், திருவள்ளூர் மாவட்டம். (அலைபேசி எண் : 9444206658) அலுவலகத்தில் நேரிலோ அல்லது tvl.tnrtp@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சுய விவரங்களை அனுப்பி வைக்குமாறு என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.