பதிவு:2024-11-29 11:41:27
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆண்டாய்வு பராமரிப்பு பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கள ஆய்வு :
திருவள்ளூர் நவ 29 : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு அலுவலக நடைமுறைகள், பதிவேடுகள், பதிவேடுகள் அறை, வழக்கு பதிவேடு, நிலம் தொடர்பு பதிவேடு, போன்ற பதிவேடுகள் ஆண்டாய்வு பராமரிப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கள ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள் தொடர்பான அலுவலக ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வின்போது பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன. கோப்புகள் எவ்வாறு கையாள படுகின்றன என்பது குறித்தும் மேலும், இங்கு பணிபுரிகின்ற அலுவலர்கள் பணிகள் எவ்வாறு உள்ளது. மேலும் , பல்வேறு தரப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் சார் ஆட்சியர் தலைமையின் கீழ் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது கோப்புகள் மனுக்கள் மீது சிறப்பாக முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். வடகிழக்கு பருவமழை முன்னிட்டு வருகின்ற 29.11.2024, 30.11.2024 ஆகிய இரு தினங்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எனவே தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் முகாம்களுக்கு தங்குவதற்கான பணிகள் சார் ஆட்சியர், வட்டாட்சியர் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். பொன்னேரி கோட்டத்தில் 33 வெள்ள பாதிப்பு பகுதிகள் உள்ளன. அவர்களை முகாம்கள் தங்க வைக்கும் பணிகள் அதற்காக துணை ஆட்சியர் அளவிலான சிறப்பு குழு அமைத்து அவர்களை முகாம்களின் தங்க வைப்பதற்கான பணிகளில் மேற்கொள்வார்கள். ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வெள்ளத் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் த பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதில் பொன்னேரி சார் ஆட்சியர் வாஹே சங்கத் பல்வந்த்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) புகழேந்தி , பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.