பதிவு:2024-11-29 11:43:46
புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் நவ 29 : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தற்பொழுது அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்து உள்ளதால் தற்பொழுது இங்கு எந்த அளவிற்கு நீர் உள்ளது என்பது குறித்து நேரில் வந்து நீரினை வெளியேற்ற வாய்ப்பு உள்ளதா என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 1 டிஎம்சி அளவிற்கு தாங்கக்கூடிய கொள்ளளவு மீதம் உள்ளது எனவே அதிக அளவு மழை பொழிவு பெய்தாலும் இந்த நீரனை தாங்க கூடிய அளவிற்கு வசதி உள்ளது சென்னையினுடைய மாநகருக்கு மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக உள்ளது. இயன்ற அளவுக்கு நீரினை தேக்கி வைப்பதற்கான முயற்சி செய்து வருகிறோம் தற்போது தண்ணீர் வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் செய்யப்படவில்லை வரக்கூடிய மழையின் சூழ்நிலையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் இது குறித்து நீர்வள ஆதார துறை அதிகாரிகளுடன் நாங்கள் விவாதிக்கப்பட்டது.
மேலும், இங்கு நீர்வள ஆதார துறையின் சார்பாக பல்வேறு வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும் குறிப்பாக 300 மீட்டர் தொலைவிற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது அதுவும் முடிவு பெற்று அதுவும் இந்த பருவமழை காலத்துக்கு முன்பாகவே முடிவுற்றது. ஆகவே மழை காலங்களில் ஏரியிலிருந்து வெளியேறும் நீரினால் கரையோர பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. மேலும் இந்த வெளியேற்றும் நீரில் கழிவுநீர் கலக்குவதை தடுப்பது குறித்தும் அல்லது அந்த நீரினை சுத்திகரிப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து இந்த ஆய்வு மேற்கொண்டு உள்ளோம் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது .
மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய நடைபாதை மற்றும் பூங்கா அமைப்பதற்கான பணிகளுக்கான திட்ட அறிக்கை சென்னை இயக்குனர் பேரூராட்சிகள் துறை சார்பாக மேற்கொள்ளப்படுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏரிகளுக்கு கொள்ளளவு அதிகம் உள்ளது. பொதுவாக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புழல் ஏரியில் மூன்று டிஎம்சி கொள்ளளவு உடையது தற்போது 2.4 டிஎம்சி ஆக உள்ளது அதேபோல் பூண்டி 3.231 டி எம் சி உடையது அதுவும் பாதி கொள்ளளவு கொண்டுள்ளது அதேபோல் சோழவரம் ஏரியின் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் அதிலும் நீர் குறைவாகத்தான் உள்ளது. நம் மாவட்டத்தில் அருகில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலும் முழு அளவுக்கு தண்ணீர் இல்லை 1 டிஎம்சி க்கு மேல் இடைவெளி இருக்கிறது.
இந்த ஆய்வு சாதாரணமாக ஆய்வு தான் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை தொடர்ந்து அதேபோல் இந்த கால்வாய் பொருத்தவரையில் 300மீ வெள்ள தடுப்பு சுவர் அமைத்து கரையை பலப்படுத்தி உள்ளோம் இந்த முறை கடந்த காலங்களில் இருந்தது போல கரையில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு இருக்காது என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதில் இயக்குனர் பேரூராட்சிகள் ஜெயக்குமார், உதவி செயற் பொறியாளர் நீர் வளம் சத்தியநாராயணன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் , நாரவாரிகுப்பம் செயல் அலுவலர் யமுனா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.