பதிவு:2024-11-29 11:47:36
திருவள்ளூரில் கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் நவ 29 : பொது சுகாதார துறையின் களப்பணியில் பணியாற்றும் கிராம , பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்களின் பல்வேறு கோரிக்ககளை வலியுறுத்தி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் கற்பகம் தலைமை தாங்கினார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 320 துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு களப்பணி சார்ந்தும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் பணியாற்றிட தமிழக அரசு நிர்பந்திப்பதாக கூறி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 3000 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்கள் மூணு வருஷமா காலியாகவே உள்ளது. இதனை நிபந்தனை இன்றி நிரப்ப வேண்டும். யூ வின் ஆன்லைன் பணிகளை சம்பந்தப்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். பிக்மி செயலி காலை நேரத்தில் வேலை செய்யாமல் இரவு நேரத்தில் மட்டும் வேலை செய்வதால் செவிலியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவது உட்பட9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.