ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு : மொத்த கொள்ளளவான 11757 மி.கன அடியில் தற்போது 6833 மி.கன அடி இருப்பு உள்ளது :

பதிவு:2024-12-04 11:41:37

திருவள்ளூர் டிச 03 : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் பருவ மழை தொடங்கி தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நீர் இருப்பு கூடி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3.231 மி.கன அடியில் தற்போது இருப்பு 916 மி. கன அடி, நீர்வரத்து 3400 கன அடி, வெளியேற்றம் 27 கன அடி

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி. கன அடியில் தற்போது இருப்பு 137 மி.கன அடி. நீர்வரத்து 82 கன அடி .புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் தற்போது இருப்பு 2718 மி.கன அடி, நீர்வரத்து 996 கன அடி, நீர் வெளியேற்றம் 209 கன அடி,கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் தற்போது இருப்பு 324 மி.கன அடி, நீர் வரத்து 50 கன அடி, நீர் வெளியேற்றம் மெட்ரோ குடி நீருக்காக103 கன அடி

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் தற்போது இருப்பு 2738 மி.கன அடி. நீர் வரத்து 1479 கன அடி, நீர் வெளியேற்றம் 22 மெட்ரோ குடிநீருக்காக 103 கன அடி.மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மொத்தக் கொள்ளளவான 11757 மி.கன அடியில் தற்போது 6833 மி.கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.