பதிவு:2024-12-04 11:47:43
திருவள்ளூரில் அடிதடி, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு :
திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர், பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ் (25), உதயா(24). இவர்கள் இருவரையும் கடந்த 8 ம் தேதி அடிதடி வழக்கில் போலீஸ் டிஎஸ்பி தமிழரசி உத்தரவின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் கைது செய்து சட்டசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தார்.
மேலும் ஆகாஷ், உதயா ஆகிய 2 பேர் மீது பல்வேறு அடிதடி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சீனிவாச பெருமாள், மாவட்ட கலெக்டருக்கு பரி்ந்துரை செய்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து நகர போலீஸ் அந்தோணி ஸ்டாலின் இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் ஒப்படைத்தார்.