திருவள்ளூரில் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி :

பதிவு:2024-12-04 11:56:43



திருவள்ளூரில் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி :

திருவள்ளூரில் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி :

திருவள்ளூர் டிச 04 : திருவள்ளூர் வி.எம். நகரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் பள்ளியில் நேற்று திருவள்ளூர் சைபர் கிரைம் போலீஸ் சார்பில் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். இதில் திரளான பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சைபர் கிரைம் போலீசார் பள்ளி மாணவ மாணவியர்களிடம், தற்போது உள்ள காலத்தில் பல்வேறு அமேசான் வெளியிட்ட செயலியில் இருந்து பேசுவதாக கூறி உங்களுக்கு கார், பணம் பரிசாக விழுந்து உள்ளது என கூறி பணம் கட்ட சொன்னால் அதை உண்மை என்று நம்பி பணம் கட்டக்கூடாது. உங்களது பாஸ்வேர்டுகளை யார் கேட்டாலும் சொல்லக்கூடாது.

சமூக வலைத்தளங்களின் முகவரி, தொலைபேசி எண், இருப்பிடம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் அல்லது உங்களது புகைப்படங்களை பகிரவோ அடுத்தவருடன் பரிமாறிக் கொள்ளவோ கூடாது. தேவையற்ற செயலிகளை உங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்ய நேர்ந்தால் குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழ வாய்ப்பு உள்ளது. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் பேஸ்புக், வாட்ஸ் அப், இமெயில் போன்ற சாதனங்களில் பதில் அளிக்காமல் இருக்க வேண்டும். இது போன்று செயல்பட்டால் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து விடுபடலாம் என தெரிவித்தனர்.மேலும் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக புகார் அளிக்க 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.