பதிவு:2024-12-04 11:55:06
திருவள்ளூர் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் :
திருவள்ளூர் டிச 04 : 2021 திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர் போக்குவரத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.
110 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அதே போல் அனைத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பு தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ. 25 லட்சமாக உயர்த்தியது போன்று பொதுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.