பதிவு:2024-12-04 12:00:15
முன்னாள் ராணுவ வீரரும் திருவள்ளூர் அதிமுக நகர்மன்ற உறுப்பினரின் தந்தையுமான சுப்பிரமணியனின் திருவுருவப் படத்தை முன்னாள் அமைச்சர் பி. வி.ரமணா திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை :
திருவள்ளூர் டிச 04 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஆனந்தி சந்திரசேகர் திருவள்ளூர் நகராட்சி 23 வது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் சந்திரசேகரின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரருமான எம்.சுப்பிரமணி என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து 16-ஆம் துக்க நிகழ்ச்சியை முன்னிட்டு அவரது திருவுருவப்பட திறப்பு விழா பெரியகுப்பத்தில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் ராணுவ வீரர் எம்.சுப்பிரமணியின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் நகர செயலாளர் ஜி.கந்தசாமி, மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கே.பி.எம். எழிலரசன், எஸ்.ஏ. நேசன், ஞானகுமார், நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமார், நகர பொருளாளர் துக்காராம், பி.வி.பாலாஜி, ஜெயாநகர் குமரேசன், புங்கத்தூர் தேவா, சதீஷ்குமார், உமாபதி, ஆர்.ஆர்.சுரேஷ்குமார், காளிதாஸ், முரளி, விஸ்வநாதன், திலகவதி, ராஜேஷ், சோபா, ஐயப்பன் டெல்லி,உட்பட அதிமுக நிர்வாகிகள் நண்பர்கள் உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.