திருவள்ளூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி :

பதிவு:2024-12-04 12:03:24



திருவள்ளூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி :

திருவள்ளூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி :

திருவள்ளூர் டிச 04 : மாவட்ட தலைநகரில் இருந்து திருவள்ளூரிலிருந்து பள்ளி, கல்லூரி பேருந்துகளும் , காக்களூர் , ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்துகள், வேன்கள், ஆட்டோ , கார் போன்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.அதிலும் குறிப்பாக இரவு நேரங்களிலும், அதிகாலை நேரத்திலும் சாலையில் அதிகளவில் ஆங்காங்கே திரி்ந்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருக்கிறது.

இதனால் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ, நகராட்சி, ஊராட்சி நிர்வாகமோ நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் நேதாஜி சாலை பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தியா (28) என்பவரது கணவர் ஜெகதீசன் (29) காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் கடந்த 29-ஆம் தேதி அதிகாலை 1 மணி அளவில் வேலை முடித்துவிட்டு தனது பல்சர் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திருவள்ளூர் - காக்களூர் சாலையில் வந்து கொண்டிருந்தார்.அப்போது காக்களூர் மெயின் ரோட்டில் தையிலை பிரியாணி கடை அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மாடு குறுக்கே வந்துள்ளது. அப்போது மாட்டின் மீது மோதி நிலை தடுமாறி ஜெகதீசன் கீழே விழுந்துள்ளார். இதில் தலை, கை, கால் என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

தகவல் அறிந்து மனைவி சந்தியா மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெகதீசன் உயிரிழந்தார்.இதுகுறித்து ஜெகதீசனின் மனைவி சந்தியா திருவள்ளூர் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலையில் மாடு குறுக்கிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது சாலையில் படுத்து கிடககும் மாடுகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பார்களா ?