திருவள்ளூர் அருகே மூலக்கரை பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் பிணம் : விபத்தில் உயிரிழந்தாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து வீசி சென்றார்களா என்று போலீஸ் விசாரணை

பதிவு:2022-06-02 17:22:51

திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட புங்கத்தூர் பகுதியை சேர்ந்த பூவரசன் (24) என்ற இளைஞர் தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது ராமதண்டலம் என்ற கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் 8 மணி அளவில் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை மூலக்கரை என்ற பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இளைஞர் பூவரசன் விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் பூவரசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் இவரை வழிமறித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து வீசி சென்றார்களா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.