பதிவு:2024-12-28 17:33:59
சிறுவனூர், நெமிலியகரம் ஊராட்சியில் ரூ.487.75 இலட்சம் மதிப்பீட்டில் 272 பணிகளில் 568 வகுப்பறை கட்டட பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு :
திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவனூர், நெமிலியகரம் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் தலா ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குழந்தை நேயப்பள்ளி உட்கட்ட அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (2023-2024) கீழ் கட்டிட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாணவர்களின் நலன் கருதி குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 215 பணிகள் 446 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளது. 48 பணிகள் 99 வகுப்பறை கட்டடங்கள் நடைபெற்று வருகிறது மீதமுள்ள 23 வகுப்பறைக்கான 9 பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.487.75 லட்சம் மதிப்பீட்டில் 272 பணிகளில் 568 வகுப்பறை கட்டட பணிகள் நடைபெற்றுள்ளன இதன் மூலம் 10000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயன்பெறுவர்கள் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பூண்டி) முரளி, மகேஷ் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.