திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கல்வி ஆய்வு கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் :

பதிவு:2024-12-28 17:36:56

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கல்வி ஆய்வு கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கல்வி ஆய்வு கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் :

திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கல்வி ஆய்வு கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட முழுவதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சீரான பாடத்திட்டம் வகுக்கும் படியும், கல்வி மேலும் பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.

இதில் உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பவானி, மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் திட்ட அலுவலர் பள்ளி துணை ஆய்வாளர்கள் வட்டார வள மேற்பார்வையாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.