திருவள்ளூர் அருகே திருட வந்ததாக 14 வயது சிறுவனை பிடித்து போலீஸிடம் ஒப்படைப்பு :

பதிவு:2024-12-31 11:15:47



திருவள்ளூர் அருகே திருட வந்ததாக 14 வயது சிறுவனை பிடித்து போலீஸிடம் ஒப்படைப்பு :

திருவள்ளூர் அருகே திருட வந்ததாக 14 வயது சிறுவனை பிடித்து போலீஸிடம் ஒப்படைப்பு :

திருவள்ளூர் டிச 30 : திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது.இந்த கட்டிடப் பணிகளுக்காக இரும்பு கம்பிகள், எலக்ட்ரிக் பொருட்களை கட்டிடத்தின் பின்புறம் உள்ள அறையில் வைத்துள்ளனர். இந்த நிலையில்14 வயது சிறுவன் அங்கு வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பொருட்கள் மற்றும் கம்பிகளை எடுத்து கொண்டிருந்ததாக கட்டிடத்தில் இருந்த வேலையாட்கள் சிறுவனைப் பிடித்து கட்டிட உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

அந்த 14 வயது சிறுவனை விசாரித்த போது தான் திருத்தணி பகுதி கே.ஜி கண்டிகை சேர்ந்தவன் வீட்டிலிருந்து வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.மேலும் அச்சிறுவனை திருவள்ளூர் தாலுகா போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் 14 வயது சிறுவனாக உள்ளதாக சிறுவனை எச்சரித்து திருத்தணி பேருந்து ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் மீண்டும் அதே இடத்தில் அச்சிறுவன் நின்று கொண்டிருந்ததால் கோபமடைந்த கட்டிட உரிமையாளர் மற்றும் சக கடை ஊழியர்கள் சிறுவனை பிடித்து விசாரித்தனர்.

அந்த சிறுவன் ஏற்கனவே பலமுறை சிறுவர் காப்பகங்களில் இருந்ததாகவும் தாய், தந்தை இல்லை என மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளான்.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவல் அறிந்த போலீசார் தாங்கள் 11 மணிக்கு அவ்வழியே ரோந்து வருவோம் அதுவரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு வந்து அழைத்துச் செல்கிறோம் என மெத்தனமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அச்சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.