பதிவு:2024-12-31 11:21:41
பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் : சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :
திருவள்ளூர் டிச 31 : திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி) ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் 28.12.2023 அன்று திருவள்ளூர் மின்பகிர்மான வட்டம் உருவாக்க வாரிய நிலை ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில் ஏற்கனவே செயல்பட்டிலுள்ள செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில் இருந்து திருமழிசை கோட்டத்திற்கும் மற்றும் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டத்தில் இருந்து திருவள்ளூர், திருத்தணி கோட்டமாக செயல்பட்டிருந்தது. தற்பொழுது திருவள்ளூர், திருமழிசை, திருத்தணி ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய திருவள்ளூர் மின்பகிர்மான வட்டமாக செயல்படும். பின்னர் , தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன விழிப்புணர்வு வார விழாவிவை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியை துவக்கி வைத்தார்.
இதில் திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் உதயமலர் , மேற்பார்வை பொறியாளர் சேகர், திருவள்ளூர் செயற்பொறியாளர் கனகராஜன், மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,