திருவள்ளூர் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 391 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

பதிவு:2024-12-31 11:23:54



திருவள்ளூர் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 391 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூர் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 391 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூர் டிச 31 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 391 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 102 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 60 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 78 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 95 மனுக்களும் என மொத்தம் 391 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் இ,ஆ.ப,. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சத்தியபிரசாத் (தேர்தல்), வருவாய் கோட்டாட்சியர் க.தீபா (திருத்தணி) மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.