பதிவு:2024-12-31 11:26:17
தமிழ்நாடு முதலமைச்சர் “புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்” தொடங்கி வைத்ததை தொடர்ந்து அமைச்சர் சா.மு.நாசர் மாணவ, மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 31 : தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்” தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பட்டாபிராம் இந்து கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழாவில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினர்.அப்பொழுது அமைச்சர் தெரிவித்ததாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் , மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 8,571, தமிழ்ப் புதல்வன் திட்டதின் கீழ் 8,189, வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் பயிலும் மாணவியர்களுக்கு இன்றைய தினம் முதல் வழங்கப்பட உள்ளது .
இத்திட்டத்தில் 360 மாணவியர்கள் பயன்பெறுவர்கள் ஆக மொத்தம் ஒரு மாதத்திற்கு17,120 மாணவ, மாணவிகள்என ரூ.1,71,20,000 செலவினம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இப்படி மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையின் மூலம் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், தமிழ்நாட்டில் பயிலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அவர்கள் தெரிவித்தார்.
இதில் மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலர் வாசுகி , திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், ஆவடி மாநகராட்சி மண்டல தலைவர்கள், அம்மு, அமுதா,ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.