பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்து காவல்துறை அராஜகம் :

பதிவு:2024-12-31 11:28:13

திருவள்ளூர் டிச 31 : பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய அரசைக் கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி நுழைவு வாயிலில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா தலைமையில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான திருத்தணி திருத்தணி கோ ஹரி முன்னாள் எம்பி வேணுகோபால் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

முன்னதாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்யும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் போலீசார் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில் மாலை 6 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.