திருப்பந்தியூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 71 ஆயிரம் வடை மாலை சாற்றி தீபாராதனை :

பதிவு:2024-12-31 11:30:19

திருவள்ளூர் டிச 31 : திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்.இந்த கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 71 ஆயிரம் வடை மாலை சாற்றி அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலர் மாலைகள் வண்ண ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை ஆனது நடைபெற்றது.

இதில் மப்பேடு, சுங்குவார்சத்திரம், வயலூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருப்பந்தியூர் பகுதியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் சாமி தரிசனம் செய்தனர்.71,000 வடமாலையால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயரை காண ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.