பதிவு:2024-12-31 11:34:35
திருவள்ளூர் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து பலி :
திருவள்ளூர் டிச 31 : திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஆர் ஆர் கே பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் செந்தில் குமார் இவருக்கு மங்கை என்ற மனைவி ஜீவிதா என்ற 12 வயது சிறுமியும் மூன்று வயதுடைய மகன் மித்ரன் இருந்து வருகின்றனர். வழக்கம் போல் செந்தில்குமார் வேலைக்கு சென்ற நிலையில் அவருடைய மனைவி மங்கை வீட்டின் பின்புறம் துணி துவைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவருடைய மகன் மித்ரன் வீட்டின் முன்புறம் வெளியே விளையாடி கொண்டு இருந்துள்ளார்.வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகனை காணாததை கண்டு தாய் மங்கை அக்கம் பக்கம் வீட்டினரிடம் விசாரித்தும் மகன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர் வீட்டிலிருந்து 10 அடி தொலைவில் அரண்வாயல் ஏரிக்குச் செல்லும் கால்வாய் வழித்தடத்தில் சென்று பார்த்தபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை கண்டு தாய் அலரி கதறி அழுதுள்ளார்.
அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவன் உடலை மீட்டுள்ளனர் பின்னர் இச்சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலையம் போலீசார் தகவல் வந்ததால் அச்சிறுவன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின் சிறுவன் உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.10 ஆண்டுகளாக தவமாய் காத்திருந்து பெற்றெடுத்த மூன்று வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியானது கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.