பதிவு:2024-12-31 11:37:18
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கைபேசியால் இயங்கும் பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் டிச 31 : தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கைபேசியால் இயங்கும் பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் போது, பாம்புக்கடி, விஷப்பூச்சிகள் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்த படியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளை தொலைவில் இருந்து கைபேசியின் மூலம் இயக்கிடவும், கண்காணிக்கவும் நிறுத்திடவும் முடியும்.
மேலும், ஆதிதிராவிடர் வகுப்பினர், படிங்குடியினர் வகுப்பினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண்விசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,000/-மானியமாகவும், இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.5,000/-மானியமாக தற்போது வோள்ணமப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் வோள்ணமப் பொறியியல் துறையின் உபபோட்டங்களான திருவள்ளூரில், பெரியக்குப்பம், என்.ஜி,ஜி. காலணியில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகக்தினையும், திருத்தணியில் எண்:27, பல்லவன் கிராம வங்கி அருகில் உள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தினையும், பொன்னேரியில், எண்:20 சக்திநகர், மார்டன் பள்ளி அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தினையும் நேரில் அணுகி பயனடையலாம். அல்லது அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.