திருவள்ளூரில் ஆங்கிலப் புத்தாண்டு 2025 அனைத்து மத கோயில்களில் பொது மக்கள் புத்தாண்டை வரவேற்று வழிபாடு :

பதிவு:2025-01-02 11:35:22



திருவள்ளூரில் ஆங்கிலப் புத்தாண்டு 2025 அனைத்து மத கோயில்களில் பொது மக்கள் புத்தாண்டை வரவேற்று வழிபாடு :

திருவள்ளூரில் ஆங்கிலப் புத்தாண்டு 2025 அனைத்து மத கோயில்களில் பொது மக்கள் புத்தாண்டை வரவேற்று வழிபாடு :

திருவள்ளூர் ஜன 01 : ஆங்கிலப் புத்தாண்டு 2025 பிறந்ததால் பழைய நல்ல நினைவுகளை சுமந்து கொண்டு, தீய நினைவுகளை அழித்து விட்டு புதிய நினைவுகளோடு உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள அனைத்து மத கோயில்களிலும் பொது மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவள்ளூரில் உள்ள பிரசித்திபெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் இந்த புத்தாண்டில் நோய் தீரவும், நோய் வராமல் இருக்கவும் வேண்டி பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அதே போல் வீரராகவர் கோயில் பின்புறம் உள்ள தீர்த்தீஸ்வரர் திருக்கோயிலிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .

அதே போல் ஜெயநா நகரில் உள்ள ஸ்ரீவல்லப விநாயகர் ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஜெயாநகர், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர.

சத்தியமூர்த்தி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் ஆலயம், வேம்புலி அம்மன் ஆலயம், நேதாஜி சாலையில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயம், புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திலும் புத்தாண்டை முன்னிட்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.. இல்லாமை இல்லை என்ற நிலை வேண்டும் என்று வேண்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதே போல் பூங்காநகர் காக்களூரில் உள்ள ஸ்ரீஜலநாராயண பெருமாள் ஆலயத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

அதே போல் திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சலேசியர் ஆலயத்தில் இரவு 12 மணிக்கு ஆலயத்தின் பங்கு தந்தை தலைமையில் கிறிஸ்தவ மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து இயேசு கிறிஸ்துவை வழிபட்டனர். அதே போல் திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள டிஇஎல்சி தேவாலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இரவு முழுவதும் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருவள்ளூர் நகரில் இளைஞர்கள் சரியாக 12 மணிக்கு கேக் வெட்டி உற்சாகமாக பாடல்கள் பாடியும், நடனமாடியும் கொண்டாடி வரவேற்றனர்.