பதிவு:2025-01-02 11:38:41
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் :
திருவள்ளூர் ஜன 01 : முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சவாமி திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டு 2025 பிறப்பு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர் .
அதே நேரத்தில் புத்தாண்டு பிறப்பின் போது சாமி தரிசனம் செய்ய கடும் குளிர் ,பணியை பொருட்படுத்தாமல் மலைக்கோவில் மாடவீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் நடை தொடர்ந்து திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.