திருவள்ளூர் அடுத்த ராம தண்டலம் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் வந்த கல்லூரி மாணவர் லாரி மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு : தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை :

பதிவு:2025-01-02 11:45:40

திருவள்ளூர் ஜன 01 : திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சந்தோஷ் தனது தாய் கீதாவுடன் ராமதண்டலம் கிராமத்திற்கு சென்று இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.அப்போது ராமதண்டலம் கிராமத்தில் இருந்து புறப்பட்டபோது எம்சாண்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் கல்லூரி மாணவன் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

படுகாயம் அடைந்த அவரது தாய் கீதா திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்..மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த புல்லரம்பாக்கம் போலீசார் சந்தோஷின் உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருவள்ளூர் அடுத்த பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் சந்தோஷ் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.