திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2025-01-02 11:48:48

திருவள்ளூர் ஜன 01 : திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட் என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி 2024-25 பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நவரை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 518 பச்சைபயறு ஏக்கருக்கு ரூபாய் 298 எள் பயருக்கு ஏக்கருக்கு ரூபாய் 165 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி 17.02.2025 க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். நிலக்கடலை ஏக்கருக்கு ரூபாய் 462 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி 31.01.2025 க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். கரும்பு பயறுக்கு ஏக்கருக்கு ரூபாய் 1200 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி 31.03..2025 க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

எனவே மேற்குறிப்பிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ (இ - சேவை மையங்கள்) நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ - சேவை மையங்கள்), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று கொள்ளலாம். பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.