பதிவு:2025-01-02 11:50:56
திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் அனைத்து மண்டலத்திற்கான புதிய மண்டல தலைவர்களுக்கான தேர்தல் :
திருவள்ளூர் ஜன 02 : திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் தனியார் அரங்கத்தில் அனைத்து மண்டலத்திற்கான புதிய மண்டல தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் மூலம் மண்டல தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி திருவள்ளூர் நகர தலைவராக லோகநாதன், கடம்பத்தூர் மண்டல தலைவராக ரவிக்குமார், பூண்டி மண்டல தலைவரக ரஞ்சனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மண்டல தலைவர்களை மாவட்டத் தலைவர் அஸ்வின் என்ற ராஜ சிம்மம் மகேந்திரா, மக்களவை தொகுதி பொறுப்பாளர் பொன்.வி.பாலகணபதி, மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன், ஆர்யா சீனிவாசன் மாவட்டச் செயலாளர்கள் பாலாஜி, பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் லோகேஷ் பிரபு, கடம்பத்தூர் மண்டல் தலைவர் பழனி, முன்னாள் மண்டல தலைவர்கள் சதீஷ்குமார், பூண்டி சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.