பதிவு:2025-01-02 11:53:03
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கம் மற்றும் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றுதல், அன்னதானம் வழங்குதல் எனும் முப்பெரும் விழா :
திருவள்ளூர் ஜன 02 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கம் மற்றும் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றுதல், அன்னதானம் வழங்குதல் என்னும் முப்பெரும் விழா கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் இறையாமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பூபதி, ஒன்றிய செயலாளர் விஜயராகவன்,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கண்ணன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து, வன்னியர் சங்கம் மற்றும் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் ஏராளமானவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இறுதியில் முரளி நன்றி கூறினார்.