பதிவு:2025-01-04 13:00:32
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.6.85 லட்சம் மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நுழைவாயில் : அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :
திருவள்ளூர் ஜன 03 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6.85 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நுழைவாயில் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார்,திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை போற்றும் வகையில் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில் 2024-25 ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்கத்துல்லா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தென்னவன்,இந்திரா பொன் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன் ரவி, வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.