திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுவதை நெறிமுறைபடுத்தும் வகையில் பிரத்யேக வாகனங்கள் நிறுத்துமிடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பு :

பதிவு:2025-01-04 13:03:20



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுவதை நெறிமுறைபடுத்தும் வகையில் பிரத்யேக வாகனங்கள் நிறுத்துமிடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பு :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுவதை நெறிமுறைபடுத்தும் வகையில் பிரத்யேக வாகனங்கள் நிறுத்துமிடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பு :

திருவள்ளூர் ஜன 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுவதால் ஒழுங்கின்றி அரசு அலுவலர்களும் ஆட்சியரகத்திற்கு வருகை தரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனை நெறிமுறைபடுத்தும் வகையில் பிரத்யேக வாகனங்கள் நிறுத்துமிடங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்ததாவது :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுவதால் ஒழுங்கின்றி அரசு அலுவலர்களும் ஆட்சியரகத்திற்கு வருகை தரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனை நெறிமுறைபடுத்தும் வகையில் ஆட்சியரக வளாகத்தில் பிரத்யேக நிறுத்திமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை 03.01.2025 முதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

அதன்படி கேட் இடது பிளாக் ஏ கார்கள் மட்டும் அரசு வாகனங்கள் மற்றும் பார்க்கிங் அனுமதி பெறப்பட்ட அரசு அலுவலர்களின் தனியார் நான்கு சக்கர வாகனங்கள்,பிளாக் பி இருசக்கர வாகனங்கள் அனுமதிச் சீட்டு பெறப்பட்ட அரசு அரசு அலுவலர்களின் இருசக்கர வாகனங்கள் மட்டும் பிளாக் சி இருசக்கர வாகனங்கள் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் மட்டும், பிளாக் டி இருசக்கர வாகனங்கள் பத்திரிகையாளர்களின் வாகனங்கள் மட்டும்,கேட் வலது பிளாக் இ கார்கள்/இருசக்கர வாகனங்கள் பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் அரசு அலுவலர்களின் பார்க்கிங் அனுமதி இல்லாத தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளது.மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு ஒட்டப்பட்ட வாகனங்களை மட்டும் அலுவலகப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகன நிறுத்தத்தில் நிறுத்தம் செய்ய அனுமதிக்கப்படும். அனுமதிச் சீட்டு பெறப்படாத வாகனங்கள் தனியார் வாகன நிறுத்திமிடத்தில் மட்டுமே நிறுத்தம் செய்ய அனுமதிக்கப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு தனியாக பார்க்கிங் இடம் அமைக்கப்பட்டுள்ளது.மேற்படி, பொதுமக்களின் வாகனங்களுக்கு தனியாக வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம் தவிர்த்து வேறு எந்தப்பகுதியிலும் நிறுத்தம் செய்ய அனுமதி இல்லை என்றும், மீறினால் காவல் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 500 பேர் அமரக்கூடிய புதிய கூட்டரங்கக் கட்டிடம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்க அடிக்கல் நாட்டு விழா ஒருவார காலத்திற்குள் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றுலா மாளிகைக் கூடுதல் கட்டிடம் ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் SuWaSem என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள 4 குளங்கள் சீரமைத்து பூங்கா அமைத்தல் பணி மற்றும் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.30 இலம்சம் மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளிகள் அலுவலக கட்டிடம் சீரமைக்கப்பட்டு, கழிவறை கட்டிடம் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலக வளாகத்தில் நிழற்கூடம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து கழிவறைகளையும் சீரமைக்கப்பட்டு, புதிதாக கழிவறை கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகள், வாகன நிறுத்துமிடம், நான்கு பக்கமும் வெளி வாயிற் கதவுகள் அமைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை தடுக்கும் விதமாக வளாகத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை பராமரிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.