திருவள்ளூர் அருகே டயர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது : பல லட்சம் மதிப்பிலான டயர் வீணானதாக தகவல்

பதிவு:2022-06-04 07:31:29

திருவள்ளூர் அருகே டயர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது : பல லட்சம் மதிப்பிலான டயர் வீணானதாக தகவல்

திருவள்ளூர் அருகே டயர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது : பல லட்சம் மதிப்பிலான டயர் வீணானதாக தகவல்

திருவள்ளூர் ஜூன் 04 : திருச்சியில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்வதற்காக பல லட்சம் மதிப்பிலான டயர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் அருகே வந்த போது டீ சாப்பிடுவதற்காக ஓரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது உயர் மின் அழுத்த ஒயர் கன்டெய்னர் லாரியில் மேல் பாகம் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் லாரியின் முன் பாகம் எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மளமளவென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமாகி இருக்கக்கூடும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.