பதிவு:2025-01-04 13:05:59
திருவள்ளூரை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு : 2028-இல் தங்கம் வெல்வேன் என மனிஷா ராமதாஸ் பேட்டி :
திருவள்ளூர் ஜன 03 : மத்திய அரசின் உயரிய விருதான அர்ஜுனா விருது திருவள்ளூரை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு கிடைத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக பாரா பேட்மிண்டன் வீரராக உள்ள நிலையில் ஆசிய விளையாட்டு போட்டி, பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர். இந்த நிலையில் இவருக்கு விளையாட்டில் முக்கிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்து மனிஷாவை கட்டியணைத்து பாராட்டினர். இது குறித்து பேசிய மனிஷா, மத்திய அரசு அர்ஜுனா விருது அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமது தாய், தந்தையருக்கு நன்றி தெரிவித்தார். அடுத்தடுத்து வெற்றி பெறுவேன். அர்ஜுனா விருதை எதிர்பார்த்தேன்.அது கிடைத்துள்ளது. மேலும் 2028-இல் தங்கம் வெல்வேன் என மனிஷா ராமதாஸ் தெரிவித்தார்.