திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி : அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

பதிவு:2025-01-04 13:12:58



திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி : அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி : அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் ஜன 04 : திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சசிகாந்த் செந்தில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.துணை முதலமைச்சர் விளையாட்டு துறைக்கு பொறுப்பேற்றவுடன் நமது விளையாட்டு வீராங்கனைகள் சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லும் வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார் இன்று மிதிவண்டி போட்டியில் களம் காணும் நீங்கள் சிறப்புடன் செயல்பட்டு முதன்மை பெற வேண்டும் மேலும் மேடையில் நிற்கின்ற மாவட்ட ஆட்சியர் போன்று நீங்களும் மாவட்ட ஆட்சியராக வர வேண்டும். அல்லது உங்களின் திறமைகளுக்கு ஏற்ப திறன்களை வளர்த்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என அமைச்சர் சா.மு .நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெறும் மிதிவண்டி போட்டியில் 17 மற்றும் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிமீ போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து பூண்டி பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து மந்தை வந்தடையும், 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் , மற்றும் 17 மற்றும் 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் 15 கிமீ போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து நெய்வேலி கூட்ரோடு வரை சென்று மீண்டும் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து மந்தை வந்தடையும், 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் 10 கிமீ போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வரை சென்று மீண்டும் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து மந்தை வந்தடையும், இப் போட்டியில் முதல் இடத்தை பெரும் மாணவ மற்றும் மாணவியர்களுக்கு ரூ. 5000 வீதமும், இரண்டாம் பரிசு பெறும் மாணவ மாணவியருக்கு ரூ.3000 வீதமும், மூன்றாம் பரிசு பெறும் மாணவ மாணவியருக்கு ரூ.2000 வீதமும், நான்கு முதல் பத்து இடம் வரை பெரும் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கு ரூ.250 வீதமும், ஆக மொத்தம் பரிசுத்தொகை ரூ.70500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இதில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியின் கற்பகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வி .சேது ராஜன், தடகள பயிற்றுநர் லாவண்யா, திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.