குருத்தானமேடு கிராமத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை கட்டிடம் :அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :

பதிவு:2025-01-04 13:15:55



குருத்தானமேடு கிராமத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை கட்டிடம் :அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :

குருத்தானமேடு கிராமத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை கட்டிடம் :அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :

திருவள்ளூர் ஜன 04 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் மேல்முதலம்பேடு ஊராட்சியில் குருத்தானமேடு கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை கட்டடத்தினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே. கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி) துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாஹே சங்கத் பல்வந்த்.ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து பேசினார்.

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிறுத்தத்திற்கான நிழற்குடை கட்டடத்தினை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விடியல் பயணம் திட்டத்தில் 570 கோடி முறை மகளிர்கள் பயணம் செய்துள்ளார்கள், தாய் வீட்டு சீதனம் போல் மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையும், கல்வித் துறையினை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவியருக்கு மடிக்கணினி, இலவச பஸ் பாஸ் ,விலை இல்லா புத்தகம் மற்றும் சீருடை வழங்கி உயர்கல்வி தொடரும் அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவியருக்கு தாய் தந்தை கொடுப்பது போல் ரூ.1000 வழங்கி கல்வியை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றவர் அது மட்டுமல்லாமல் முதலமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகள் போன்ற திட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாமல் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு வங்கிக் கடன் உதவிகள் வழங்கி பொருளாதாரத்தில் மேம்படுத்தல், போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பெண்களும் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வருகிறார் ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.இதில் மாவட்ட ஊராட்சி செயலர் மோகன், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.