கும்மனூர் ஊராட்சியில் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டிடம் : அமைச்சர்கள் சா.மு.நாசர், மா.மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர் :

பதிவு:2025-01-04 13:19:45



கும்மனூர் ஊராட்சியில் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டிடம் : அமைச்சர்கள் சா.மு.நாசர், மா.மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர் :

கும்மனூர் ஊராட்சியில் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டிடம் : அமைச்சர்கள் சா.மு.நாசர், மா.மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர் :

திருவள்ளூர் ஜன 04 : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் கும்மனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் ஆதிதிராவிடர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2022 -23) ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம் கட்டடத்தினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்,சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம் (மாதவரம்) துரை சந்திரசேகர் (பொன்னேரி) ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாஹே சங்கத் பல்வந்த் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தனர்.அப்பொழுது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 3 வருடத்தில் அனைத்து பொதுமக்களிலேயே சமத்துவம் மேலோங்க சமத்துவபுரம் என்ற திட்டத்தை கொண்டு வந்து அதுவும் தந்தை பெரியார் பெயரிலே தொடங்கப்பட்டு சமத்துவபுரம் செயல்பட்டு வருகிறது .அனைத்து பொதுமக்களிடையே சமத்துவம் விளங்கிட கலப்புத் திருமணத்தை ஊக்குவித்தார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். போன்ற பல்வேறு திட்டங்களை நமது நலன் கருதி அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும். எழுப்பியுள்ள சமுதாய கூடம் கட்டிடம் கும்மனூர் ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த சமுதாய நலக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. மதிவேந்தன் தெரிவித்தார்.

இதில் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி, துணை பெருந்தலைவர் கர்ணாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கம் சாந்தினி , கும்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதா, துணைத் தலைவர் மின்னலா காந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.