பதிவு:2025-01-04 13:43:11
திமுக இளைஞரணி செயலாளர்- துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ வழங்கினார்:
திருவள்ளூர் ஜன 04 : திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நகர மன்ற தலைவரும் மேற்கு மாவட்ட துணை செயலாளர் பா.உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம் எல் ஏ, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களாக பணியாற்றும் 190 பேருக்கு வேட்டி, சேலை, லுங்கி மற்றும் எவர் சில்வர் தட்டு, பை ஆகியவற்றை வழங்கினர். அதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள், நகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்கள் என 750 பேருக்கு பிரியாணி வழங்கி தாங்களும் துப்புரவு பணியாளர்களோடு அமர்ந்து அறுசுவை உணவு சாப்பிட்டனர்.
முன்னதாக பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் வார்டு உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், பி. நீலாவதி பன்னீர்செல்வம், கு. பிரபாகரன், ஆர்.பிரபு, ஜி.சாந்தி கோபி, த. அய்யூப் அலி, டி.கே.பாபு, வி.இ.ஜான், ஜி.ஆர்.ராஜ்குமார் (எ)தாமஸ், எஸ். பத்மாவதி ஸ்ரீதர், பி. அருணா ஜெய் கிருஷ்ணன், டி.செல்வகுமரன், இந்திரா பரசுராமன், வி.சீனிவாசன், ஹேமலதா நரேஷ், ஆர் விஜயகுமார், எஸ்.கமலி மணிகண்டன், எஸ்.தனலட்சுமி சீனிவாசன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.