பதிவு:2025-01-04 13:47:30
துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி மற்றும் நகர திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மற்றும் எம். எல்.ஏ. வழங்கினர் :
திருவள்ளூர் ஜன 04 : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி மற்றும் நேற்று ஜனவரி 3-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வி.எஸ்.நேதாஜி தலைமை தாங்கினார்.திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு. ரவிச்சந்திரன், நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் மோ. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் கே. ஏ. மதியழகன், ஆர். கார்த்திகேயன், எ. கோபி, ஆர். வாசு, என். கேசவன், பி.ஆர்.பிரபாகரன், பீமன் டி. பால்ராஜ், கே.ஜி.ஆர். ராஜேஷ்குமார், டி.சிவக்குமார், டி. ரகுநாதன் ஆகியோர் வரவேற்றனர்.இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம் எல் ஏ, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.
அதன்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவம்பர் மாதம் 27-ஆம் தேதி பிறந்த 20 குழந்தைகள், மற்றும் நேற்று ஜனவரி 3-ஆம் தேதி பிறந்த குழந்தைகள் 20 பேர் என மொத்தம் 40 பேருக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கி வாழ்த்தினர்.
இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கே. திராவிட பக்தன், ஆர் டி இ ஆதிசேஷன், கூளூர் ராஜேந்திரன், பி.சிட்டிபாபு, முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன் பாண்டியன், அணிகளின் அமைப்பாளர்கள் சரஸ்வதி சந்திரசேகர், சி.சு.விஜயகுமார், நந்தகோபால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தா. மோதிலால், கடம்பத்தூர் இளைஞர் அணி மோகனசுந்தரம், காஞ்சிப்பாடி சரவணன், களாம்பாக்கம் பன்னீர், பவளவண்ணன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.