பதிவு:2025-01-08 11:39:15
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜன 07 : திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் துவக்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் அளவில் இருக்க அனைத்து சிக்கல் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை செய்து கொள்ள தனியார் மருத்துவர்களை அணுகும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகித்தினை படிப்படியாக குறைக்க சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தினை அரசு மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது அதற்கான அலைபேசி எண்கள் 9384814050, 9384814049, 9384814048, 9384814047, 9384814046 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க முடியும் இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகித்தினை படிப்படியாக குறைக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.
பின்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளித்து சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் பல் மருத்துவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார் தொடர்ந்து கர்ப்ப காலங்களில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் தொடர்பான 100 மகப்பேறு இழப்புகள் 100 பாடங்கள் என்ற புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் வெளியிட மருத்துவ அலுவலர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அணுகும் போது அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தினால் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். மகப்பேறு மற்றும் தாய் செய் நலம் பாதுகாப்பு குறித்தும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும், மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முறைகளை பின்பற்றினால் மகப்பேறு இறப்பு விதத்தை குறைக்க முடியும், மகப்பேறு நிபுணர் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த சோகை சம்பந்தமாகவும் மருத்துவர்கள் கருத்துரை வழங்கினார்.
இதில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி,மாவட்ட சுகாதார அலுவலர்கள் ப. பிரியா ராஜ் (திருவள்ளூர்) பிரபாகரன் (பூந்தமல்லி) ஆவடி மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜேந்திரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணை இயக்குனர் ஜெ.நிர்மல் சன் , மாவட்ட இணை இயக்குனர் சுகாதார அலுவலர் அம்பிகா சண்முகம் , மாவட்ட துணை இயக்குனர் குடும்ப நலம் அலுவலர் சேகர் , மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பேராசிரியர் பாத்திமா மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.