பதிவு:2022-06-04 07:34:37
திருவாலங்காட்டில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற வடமாநிலத்தவரை அந்த பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு
திருவள்ளூர் ஜூன் 04 : மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த மனிஷ் என்ற நபர் திருவாலங்காடு சர்க்கரை ஆலை அருகே உள்ள நான்கு முனை சந்திப்பில் சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து திருவாலங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தை வடநாட்டவர் ஒருவர் திருட முயற்சித்த சம்பவம் திருவாலங்காடில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வேறு எங்காவது இருசக்கர வாகனத்தை திருடி இருப்பாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.