பதிவு:2025-01-08 11:43:50
திருவள்ளூரில் உள்ள இஸ்லாமியர்களின் ஈதுகா வளாகத்தை நெடுஞ்சாலை துறை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் பி வி ரமணா மற்றும் இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு :
திருவள்ளூர் ஜன 07 : திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை சாலையில் இஸ்லாமியர்களின் தொழுகை செய்யும் ஈதுகா மைய வளாகத்தில் கடந்த 400 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் தொழுகை செய்து வருகின்றனர் இந்நிலையில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அந்த ஈதுகா மைய வளாகத்தை அகற்றப் போவதாக நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் பி வி ரமணாவிடம் சிறுபான்மையின மக்கள் சாலை விரிவாக்கத்திற்காக ஈதுகா மையத்தை அகற்றாமல் இருக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று முன்னாள் அமைச்சர் பி வி ரமணா தலைமையில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.. சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஈதுகா மைய வளாகம் அகற்றப்படும் சூழ்நிலை வந்தால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா எச்சரித்தார்.