பதிவு:2025-01-08 11:53:57
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணியையும் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜன 08 : தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும் அவரைக் காப்பாற்றும் அதிமுக பாஜக கள்ளக்கூட்டணியையும் கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன் தலைமை தாங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட துணை செயலாளர் உதயமலர் பாண்டியன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், மோ.ரமேஷ், கே.அரிகிருஷ்ணன், கூளூர் ராஜேந்திரன், சண்முகம், ராஜேந்திரன், பழனி,அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கிரண்குமார், சரஸ்வதி சந்திரசேகர், வி.எஸ்.நேதாஜி, தா.மோதிலால், டி.கே.பாபு, ஆணழகன் டி.கே.திலீபன் முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.