ஆவடி பருத்திப்பட்டு சூழலியல் பூங்காவில் முழு நேர கிளை நூலகத்திற்கான கட்டடம் : சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து பார்வையிட்டார் :

பதிவு:2025-01-09 15:01:28

திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பருத்திப்பட்டு சூழலியல் பூங்காவில் தமிழ்நாடு அரசு போக்கு பொது நூலகத்துறை திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் முழு நேர கிளை நூலகத்திற்கான கட்டடத்தினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து பார்வையிட்டார்.மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி தலைமை தாங்கினார்.ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பொழுது அமைச்சர் தெரிவித்ததாவது :

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இயங்கி வந்த ஆவடி முழுநேர கிளை நூலகம் 30 ஆண்டுகளுக்கு மேலாக 6200 உறுப்பினர்கள், 62 ஆயிரம் புத்தகங்களுடன் செயல்பட்டு வந்தது தினசரி 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் நூலகத்தை பயன்படுத்தி வந்தனர். கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்த காரணத்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின், இந்த நூலக கட்டிடத்தை வேறு கட்டடத்துக்கு உடனடியாக மாற்றும் படி அறிவுறுத்தினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் மாநாட்சி மன்ற தீர்மானம் மூலம் நூலகம் செயல்பட கட்டடம் ஒதுக்கப்பட்டது.

இக்கட்டத்தில் இரண்டு தளங்கள் கொண்ட தரைத்தளத்தில் நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு , குடிமைப்பணி பயில் மையம் ,நூல் வழங்கும் பிரிவு, இணைய நூலகம் ,கேட்பொலி நூலகம் , முதல் தளத்தில் சிறுவர் நூலகம் , சிறப்பு இதழ்கள் பிரிவு, சொந்த நூல்கள் படிப்பகம் ஆகிய பிரிவுகளைக் கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்நூலகத்தை வாசகர்கள் சிறப்பான முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட நூலக அலுவலர் மு கவிதா, துணை மேயர் சூர்யா குமார் , ஆவடி மாநகராட்சி பொறியாளர் ரவிசந்திரன், மண்டல தலைவர்கள் அம்மு, அமுதா, ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாசகர்கள் , பொதுமக்கள் மற்றும் நூலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.