திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :

பதிவு:2025-01-09 15:03:32



திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் ஜன 09 : தமிழகம் முழுவதும் அனைத்து அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கழக பொது செயலாளர் ஆணைக்கிணங்க தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.நகர செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆயில் சரவணன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள்,மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை கட்டுப்படுத்த வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ஆயிரம் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கக் கோரியும்,போதை மற்றும் கஞ்சா இல்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி பதாகையை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சிறுமி பதாகையை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கிரி பாபு, மாவட்ட துணை செயலாளர் தியாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் மனோஜ் குமார், ஒன்றிய செயலாளர்கள் பாலாஜி, பிரேம்குமார், மணவாளன், சுதாகர், முரளி, வெங்கடேசன், நகர நிர்வாகிகள் பாலச்சந்தர், டில்லி, சுரேஷ்பாபு, கோதண்டன், ஏழுமலை, ஆறுமுகம், ராஜா உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.