பதிவு:2025-01-09 15:10:34
திருவள்ளூரில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுனர் முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி அப்ரண்டிஸ் ஷிப் மேளா வருகிற 20.01.2025 திங்கள் கிழமை அன்று காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படும் இம்முகாமில் தகுதியுடைய ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.
மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் அவர்களை நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9499055663, 8778452515 மற்றும் 9444139373 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தொழில் பழகுநர் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.