பதிவு:2025-01-09 15:12:50
திருவள்ளூரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் - 2025 முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, திருவள்ளூர் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பாதுகாப்பான பாதுகாப்பான வேகத்தில் செல்லவும், மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டவேண்டாம், வேகத்தை விட பாதுகாப்பே மிகவும் முக்கியம்,திரும்பும் முன் சிக்னல் செய்யவும், இரவில் எதிரில் வாகனம் வரும் போது விளக்கின் வெளிச்சத்தை குறைக்கவும், ஆளில்லாத லெவல் கிராசில் வாகனம் நின்று பார்த்துச்செல்லவும், பின்புறம் சிவப்பு விளக்கு அவசியம், சாலை சந்திப்புகளில் வேக்தை குறைக்கவும், சாலை சந்திப்பில் வலது புறத்திலிருந்து போதிய இடைவெளியில் செல்லவும், முன் செல்லும் வாகனத்திலிருந்து போதிய இடைவெளியில் செல்லவும், சிக்னல் நின்றபின் முந்தவும். வளைவில் முந்த வேண்டாம், குறுகிய சாலையில் முந்த வேண்டாம் வாகனத்தை உரிய வரிசையில் ஓட்டவும், மஞ்சள் கோட்டைத் தாண்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர். போன்ற பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் சிலை வரை சென்று மீண்டும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகம் வந்தடைந்தது.
பின்னர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவள்ளூர் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த புகைப்பட கண்காட்சியை உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா பார்வையிட்டார்.இதில் சாலை பாதுகாப்பு நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் சென்னை கோவிந்தராஜன், திருவள்ளூர் உதவிக் கோட்டப் பொறியாளர் தஸ்னேபிஸ் பெர்னான்டோ, உதவி பொறியாளர்கள் பிரசாந்த்,அரவிந்த், சென்னை இளநிலை பொறியாளர் நெடுஞ்சாலை சாலை பாதுகாப்பு பூபாலசிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.