திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :

பதிவு:2025-01-10 12:22:47



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :

திருவள்ளூர் ஜன 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு , சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலை வகித்தனர்.

போதைப் பொருட்கள் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை தடுப்பு பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட விபரங்கள் குறித்தும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகளில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அபாராதம் மற்றும் கடைகளின் உரிமம் ரத்து செய்த விபரங்கள் குறித்தும். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறையினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டாக ஆய்வு மேற்கொள்ளும் பொழுது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடையின் விற்பனையாளர் மீது நடவடிக்கை மேற்கொண்டு கடைகளின் அபராதம் விதித்து உரிமம் ரத்து செய்ய வேண்டும்.

சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் சென்னையிலிருந்து திருமழிசை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களில் உள்ள மணல்களை அள்ளி விபத்துகள் எற்படுத்துவதை சீரமைப்பது குறித்தும், அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்களை ஆய்வு மேற்கொண்ட விபரங்கள் குறித்தும், சென்னையிலிருந்து பெங்களுர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாரிவாக்கம் சென்னீர்குப்பம் வரை சாலை வாகனம் செல்லுவதற்கே சிரமம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றது , நெடுஞ்சாலைதுறையினர் அந்த சாலையினை 10 நாட்கள்க்குள் பணிகளை முடித்து அறிக்கைகள் சமர்பிக்க வேண்டும். திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அந்த சாலையில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதை சீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்கள் மாவட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் குறித்து புகார் மனு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பொன்னேரி சார் ஆட்சியர் வாஹே சங்கத் பல்வந்த், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்),க.தீபா (திருத்தணி) மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) அலுவலர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.