பதிவு:2025-01-10 12:25:16
திருவள்ளூரில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் வசூல் அதிகமாக வசூல் புரிந்தவர்களுக்கு கேடயம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜன 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் வசூல் அதிகமாக வசூல் புரிந்தவர்களுக்கு கேடயத்தினை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை கொடி நாள் வசூல் புரிவதில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களில் பிடித்து வருகிறது இது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாகும் . திருவள்ளூர் மாவட்டத்திற்கான 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கு ரூ.5,50,20,000 , நாம் இலக்கைக் காட்டிலும் ரூ.6,06,80, 000 வசூல் புரிந்து மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளோம். அதற்காக உழைத்த அனைத்து அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் நாம் கொடி நாள் வசூல் செய்கின்ற ஒவ்வொரு பணமும் முன்னாள் படை வீரர் நலனுக்காக செலவிடப்படுகிறது. இதேபோன்று வருகின்ற ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் வசூல் புரிந்தமைக்காக சிறப்பான இடத்தைப் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த். முன்னாள் படை வீரர் நல அலுவலர் வெங்கடேஷ் குமார் தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.