உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “ஊர் கூடி ஊரணி காப்போம்” திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் பாண்டேஸ்வரம் ஏரியை புனரமைக்கும் பணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

பதிவு:2022-06-07 12:21:37



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “ஊர் கூடி ஊரணி காப்போம்” திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் பாண்டேஸ்வரம் ஏரியை புனரமைக்கும் பணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “ஊர் கூடி ஊரணி காப்போம்” திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் பாண்டேஸ்வரம் ஏரியை புனரமைக்கும் பணி :  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் ஜூன் 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத் ஆதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 75 ஏரிகளை புனரமைக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்ட “ஊர் கூடி ஊரணி காப்போம்” திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் ENVIRONMENTALIST FOUNDATION OF INDIA என்ற தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், பாண்டேஸ்வரம் ஏரியை புனரமைக்கும் பணிகளையும்,மரக்கன்றுகளை நடவு செய்து, மரக்கன்றுகள் நடும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு பேசினார்.

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், பாண்டேஸ்வரம் கிராமத்தில் உள்ள பாண்டேஸ்வரம் ஏரியானது நீர்வள ஆதார துறையின் பராமரிப்பில் உள்ள ஏரியாகும். இந்த ஏரியின் நீர்பரப்பு 78.88 ஹெக்டேர் ஆகும். இதன் கொள்ளளவு 0.49 மில்லியன் கன மீட்டர் ஆகும். இந்த ஏரியின் கரையின் நீளம் 2134 மீட்டராகும். 3 மதகுகள் மற்றும் 1 கலங்கள் கொண்டுள்ளது. நீர் வழிந்தோடியின் நீளம் 54.85 மீட்டர் ஆகும். நினைவு குறிப்புகளின் படி இந்த ஏரியின் ஆயக்கட்டு 170.85 ஹெக்டேர் ஆகும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 75 ஏரிகள், குளங்கள் புனரமைத்தல் பணிகள் “ஊர் கூடி ஊரணி காப்போம்” ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி பாண்டேஸ்வரம் ஏரியில் சீரமைப்பு பணிகளில் கலங்கல் பழுதுபார்த்தல், கரையை பலப்படுத்துதல், முன்பக்க கரை அமைத்தல், எல்லை கற்கள் நடுதல் மற்றும் கரையை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இயற்கை வளம் பாதுகாக்கப்படுவதால் பல்லுயிர் பண்முகத்தன்மை பாதுகாக்கப்படும் இதுபோன்ற “சமுதாய பங்கேற்பினால்", நீர் நிலை பாதுகாப்பு உறுதியாகும். எனவே, நன்மைகளை எய்தும் நோக்கத்துடன், நமது நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திரதின அமுதப் பெருவிழா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினையொட்டியும் அரசு, பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பங்கேற்புடன் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளை மம்படுத்தும் நோக்கத்துடன் “ஊர் கூடி ஊரணி காப்போம்" என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.பின்னர் பாண்டேஸ்வரம் ஏரி பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சு.சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் சி.பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன்,ENVIRONMENTALIST FOUNDATION OF INDIA நிறுவன ஒருங்கிணைப்பாளர் அருண்,Social Work Team Trust நிறுவனர் சமீர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.