பதிவு:2025-01-10 12:27:55
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் :
திருவள்ளூர் ஜன 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் குடியரசு தின விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் ஒவ்வொரு துறைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக நடத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், தனித்துணை ஆட்சியர்(சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்) தீபா (திருத்தணி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்